Paristamil Navigation Paristamil advert login

டிக்டாக் பெயரில் வாடிக்கையாளர்களை குறிவைக்கும் இணையதள மோசடிகள்!

டிக்டாக் பெயரில் வாடிக்கையாளர்களை குறிவைக்கும் இணையதள மோசடிகள்!

7 ஆடி 2020 செவ்வாய் 16:03 | பார்வைகள் : 8606


சீன செயலியான டிக் டாக்கை மத்திய அரசு தடை செய்து விட்ட நிலையில், அதே பெயரில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு என்று டிக்டாக் புரோ செயலி இருப்பதாகவும், அதை பதிவிறக்கம் செய்யுமாறும் ஆன்லைன் மோசடி பேர்வழிகள், டுவிட்டர் வாயிலாக குறுஞ்செய்திகளை அனுப்புவதாக தெரிய வந்துள்ளது.

 
அதற்கான பொய்யான லிங்க் ஒன்றையும் அவர்கள் அனுப்புகின்றனர். அதை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்தால், டிக்டாக் போன்ற குறியீடு வருவதுடன், கேமரா, மைக்ரோபோன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் அனுமதியும் கோரப்படுகிறது. எல்லாவற்றுக்கும் ஓகே கொடுத்தால், போலியானா டிக்டாக் செயலி செல்போனில் பதிவிறக்கமாகி தவறாக பயன்படுத்த ஏதுவாகிறது.
 
கூகுள் பிளேஸ்டோர் உள்பட எந்த தளங்களிலும் டிக்டாக்கை பதிவிறக்கம் செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று 23 கோடி பேர் பதிவிறக்கம் செய்த போலி செயலிகள் வாயிலாக பலரின் முகநூல் தரவுகள் திருடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்