Paristamil Navigation Paristamil advert login

Android திறன்பேசி செயலிழந்து விட்டதா?

 Android திறன்பேசி செயலிழந்து விட்டதா?

2 ஆடி 2020 வியாழன் 19:33 | பார்வைகள் : 8966


Android திறன்பேசிகளில் மாலை நேர மேகமூட்டத்தோடு ஏரி ஒன்று காட்சியளிக்கும் படத்தை, Wallpaper எனப்படும் பின்னணிக் காட்சியாகத் தெரிவுசெய்தவுடன், அது செயலிழந்து விடுவதாகப் பலர் குறை கூறியுள்ளனர்.
 
Samsung, Google Pixel ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த திறன்பேசிகளும் அதில் அடங்கும் என BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.
 
திறன்பேசியின் திரை, தானாகவே இயங்கத் தொடங்கித் தானாகவே அணைவதாகப் (on, off) பலரும் சமூக ஊடகங்களில் கூறினர்.
 
சிலருக்கோ, திறன்பேசியை வாங்கியபோது இருந்ததைப் போல் (factory reset) அதை ஆக்க நேரிட்டது.
 
Samsung நிறுவனம், இம்மாதம் 11ஆம் தேதி ஆக அண்மைப் பாதுகாப்புத் திருத்த மென்பொருளை (Android 11) வெளியிடுவதாக இருந்தது. ஆனால், அதன் வெளியீட்டு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
 
Android 10 மென்பொருளில் இயங்கும் சில திறன்பேசிகளில் மட்டுமே, இந்தப் பிரச்சினை காணப்பட்டது.
 
திறன்பேசியிலுள்ள மென்பொருளுக்கு, குறிப்பிட்ட இந்தப் படத்தின் வண்ணத்தை எப்படிப் பிரதிபலிப்பது என்பதில் சிக்கல் இருந்தால் இவ்வாறு ஆகக் கூடுமென வல்லுநர்கள் கூறினர்.
 
இருப்பினும், இவ்வாறு நேர்வதற்கான அதிகாரபூர்வக் காரணம் இன்னமும் வெளியிடப்படவில்லை.
 
எனவே, சமூக ஊடகங்கள் வழியாக அந்தப் படம் கிடைக்கப்பெற்றால் அதைப் புறக்கணிக்குமாறு நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்