Paristamil Navigation Paristamil advert login

உலகிலேயே மிகப்பெரிய பவர்பேங்க் - 5,000 போன், TV, ஃபிரிட்ஜூக்கும் சார்ஜ் செய்யலாம்..!

உலகிலேயே மிகப்பெரிய பவர்பேங்க் - 5,000 போன், TV, ஃபிரிட்ஜூக்கும் சார்ஜ் செய்யலாம்..!

4 மாசி 2022 வெள்ளி 07:40 | பார்வைகள் : 10160


பவர் பேங்க் மற்றும் போர்ட்டபிள் சார்ஜர்கள் அண்மைக்காலமாக தினசரி தேவையாகிவிட்டன. பயணத்தின் போது அல்லது மின்சாரம் இல்லாதபோது, சார்ஜ் தீர்ந்துவிட்டால் பவர்பேங்க் கைகொடுக்கிறது. 

 
பேட்டரி பேக்கப்போல் எல்லோரும் பவர்பேங்க் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த எலக்டிரானிக்ஸ் வல்லுநர், உலகிலேயே மிகப்பெரிய பவர் பேங்க் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
 
அவரது பெயர் ஹேண்டி ஜெங். தன்னுடைய யூடியூப் பக்கத்தில் ‘27,000,000 mAh போர்ட்டபிள் பவர் பேங்க்’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை அண்மையில் பதிவேற்றியுள்ளார். அதில், தான் வடிவமைத்துள்ள உலகிலேயே மிகப்பெரிய பவர் பேங்கை பார்வையாளர்களுக்கு காண்பித்தார். 
 
அதிகபட்சம் 3 ஆயிரம் அல்லது 4000 mAh திறன் கொண்ட பேட்டரிகள் மட்டுமே இருக்கும் நிலையில், மிகப்பெரிய பவர் பேங்க் ஒன்றை வடிவமைத்தால் என்ன? என்று தனக்கு தோன்றியதாக தெரிவிதுள்ள ஜெங், அதனடிப்படையில் மிகப்பெரிய பவர் பேங்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். 
 
இதற்காக மின்சார கார்களில் பயன்படுத்தும் பேட்டரிகளை கொண்டு இந்த பவர் பேங்கை அவர் உருவாக்கியுள்ளார். ஜெங் உருவாக்கியுள்ள பவர் பேங்கில் ஒரே சமயத்தில் 5 ஆயிரம் ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜ் செய்ய முடியும். டிவி மற்றும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால், எலக்ரிடிக் ஸ்கூட்டருக்கு தேவையான சார்ஜிங்கையும் அவர் உருவாக்கியுள்ள பவர் பேங்க் மூலம் செய்து கொள்ள முடியும். 
 
இந்த பவர் பேங்கில் சக்கரம் வைக்கப்பட்டுள்ளதால், எங்கு வேண்டுமானாலும் வாகனங்களுடன் இணைத்து எடுத்துச் செல்லலாம்.  மிகப்பெரியதாக இருப்பது மட்டுமே இந்த பவர் பேங்கின் குறை. ஏனென்றால் எல்லோராலும் அதனை அவ்வாறு எடுத்துச் செல்ல முடியாது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்