உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு நீதிபதியை உருவாக்கியுள்ளது சீனா
2 தை 2022 ஞாயிறு 07:57 | பார்வைகள் : 9781
சூப்பர் கம்ப்யூட்டர்கள் முதல் ரோபோக்கள் வரை உருவக்கியுள்ள சீனா, தற்போது, உலகிலேயே முதல் முறையாக, AI நீதிபதி அதாவது செயற்கை நுண்ணறிவு கொண்ட நீதிபதியை உருவாக்கியுள்ளது. இந்த நீதிபதி வாய்மொழி வாதங்களைக் கேட்டு 97 சதவீதம் சரியான தீர்ப்புகளை தருவதாக சீனா கூறியுள்ளது. இந்த நீதிபதி, ஷாங்காய் புடாங் மக்கள் வழக்கறிஞரால் தயாரிக்கப்பட்டுள்ளார். தொழில்நுட்பத்தின் உதவியால் வழக்கறிஞர்களின் பணிச்சுமை குறையும் என சீனா நம்புகிறது.
சில வழக்குகளில், இந்த AI நீதிபதி, விசாரணையை கேட்டு, தீர்ப்புகளை வழங்க முடியும் என்று நீதிமன்ற அலுவலகம் கூறியது. இந்த இயந்திரத்தை டெஸ்க்டாப் கணினியில் பயன்படுத்தலாம். இந்த AI நீதிபதி தனது அமைப்பில் உள்ள பில்லியன் கணக்கான தரவுகளை பகுப்பாய்வு செய்கிறார். உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான வழக்குகளைப் பயன்படுத்தி இந்த செயற்கை நுண்ணறிவு நீதிபதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் 2015 முதல் 2020 வரையிலானவை.
இப்போதைக்கு இந்த நீதிபதிக்கு ஆபத்தான ஓட்டுநர்கள், கிரெடிட் கார்டு மோசடி மற்றும் திருட்டு வழக்குகள் போன்றவற்றை தீர்க்கும் திறன் உள்ளது. ஆனால் சீன மக்களிடம் இதற்கு வரவேற்பு இல்லை. ஒரு வழக்கறிஞர், "தொழில்நுட்ப ரீதியாக, 97 சதவீத துல்லியமாக தீர்ப்பு வழங்கலாம், ஆனால் எப்போதும் பிழை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது" என கூறுவதோடு, தவறு நடந்தால் அதற்கு யார் பொறுப்பு? வழக்கறிஞர், இயந்திரம் அல்லது அல்காரிதம் வடிவமைப்பாளர் என யார் ஒறுப்பேற்பார்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்
"AI என்னும் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், தவறைக் கண்டறிய முடியும், ஆனால் முடிவெடுப்பதில் மனிதர்களின் இடத்தை அதனால் எடுத்துக் கொள்ள முடியாது," என்று வழக்கறிஞர் ஒருவர் கூறினார். AI துறையில் சீனா மற்றும் ரஷ்யா காரணமாக அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக பிரித்தானிய உளவு நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், AI துறையில் சீனா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.