Whatsappல் வரவுள்ள புதிய 4 சிறப்பம்சங்கள்

20 கார்த்திகை 2021 சனி 07:34 | பார்வைகள் : 12472
உலகளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் மெசேஜிங் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. இதில் அவ்வபோது புதிய அப்டேட்கள் மற்றும் அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன.
அந்த வகையில் விரைவில் வாட்ஸ் அப்பில் வரவுள்ள 4 புதிய சிறப்பம்சங்கள் குறித்து காண்போம்.
New Group Icon
ஆண்ட்ராய்டு 2.21.24.3 அப்டேட்டிற்கான வாட்ஸ்அப் பீட்டாவை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதுப்பிப்பில், குரூப் ஐகான் அம்சத்திற்கு நிறுவனம் ஒரு சிறிய ஆனால் சுவாரஸ்யமான புதுப்பிப்பை செய்துள்ளது. இப்போதைக்கு, default ஆக குரூப் ஐகானில் மூன்று பேர் உள்ளனர். இப்போது, நிறுவனம் அதை இரண்டு நபர்களாக மாற்றியுள்ளது. இது ஒரு முக்கியமற்ற மாற்றமாகத் தோன்றினாலும், இது சமூகங்களை இணக்கமாக வளர்ப்பதற்கான ஒரு படியாக இருக்கலாம் என்று WABetaInfo தெரிவிக்கிறது.
Bigger Stickers
வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா 2.2146.4 அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டை பயனர்களின் கணினி திரைகளில் உள்ள ஸ்டிக்கர்களை பெரிதாக்குகிறது. இது பெரிதாகத் தெரியவில்லை என்றாலும், வாட்ஸ்அப்பின் கணினி பயன்பாட்டில் உள்ள ஸ்டிக்கர்களை திரை அளவுக்கேற்ப விகிதாசாரமாகத் தோற்றமளிக்கும்.
Pause and Resume voice recordings
iOS 2.21.230.16 அப்டேட்டிற்காக WhatsApp பீட்டாவை WhatsApp நிறுவனம் வெளியிட்டது. இந்தப் அப்டேட்டின்படி குரல் பதிவுகளை இடைநிறுத்தி மீண்டும் தொடங்கும் திறனைக் கொண்டுவருகிறது. வாட்ஸ்அப்பில் குரல் குறிப்பை பதிவு செய்யும் போது Delete மற்றும் Send பட்டன்களின் நடுவில் புதிய pause/resume பட்டன் இனி தோன்றும்.
Unknown Business Accounts
வாட்ஸ்அப், அதன் ஆண்ட்ராய்டு 2.21.24.5க்கான வாட்ஸ்அப் பீட்டாவில், தெரியாத வணிகக் கணக்குகள் பயனர்களைத் தொடர்பு கொள்ளும்போது அவர்களுக்குத் அது குறித்து தெரிவிக்கும் அம்சத்தை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் பயனர்கள் தங்கள் தொடர்பு பட்டியலில் வணிக கணக்கை சேர்க்கலாம் அல்லது தடுக்கலாம்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1