Paristamil Navigation Paristamil advert login

விபத்தில் சிக்கிய இளைஞரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வொட்ச்!

விபத்தில் சிக்கிய இளைஞரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வொட்ச்!

3 ஐப்பசி 2021 ஞாயிறு 12:11 | பார்வைகள் : 10174


சாலை விபத்தில் மயக்கமடைந்த நபர் ஒருவர் ஆப்பிள் வாட்ச் மூலம் காப்பாற்றப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
இன்றைய நவீன தொழில்நுட்பம் மனிதர்களுக்குப் பல்வேறு வகையில் உதவி புரிகிறது. அந்த வகையில் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த ஆப்பிள் வாட்ச் ஒரு இளைஞரின் உயிரை காப்பாற்றிய நிகழ்வு சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது.
 
சிங்கப்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முகமது ஃபிட்ரி என்பவர் மீது வேன் ஒன்று மோதியது. இதில், நிலைதடுமாறி சாலையில் விழுந்த அவர் மயக்கமடைந்தார். இதனால் அவர் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கிவிழுந்தார். யாரும் அவருக்கு உதவவில்லை. எனினும், விபத்தினால் உண்டான அதிர்வுகளால் முகமது ஃபிட்ரியின் கையில் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச்சில் இருந்து அவசர உதவி எண்ணுக்கு தகவல் சென்றுள்ளது.
 
அதன்மூலம் இருப்பிடத்தை அறிந்து, விபத்தில் காயமடைந்த முகமது ஃபிட்ரி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
 
ஆப்பிள் வாட்ச்சில் ஆபத்து காலங்களில் அவசர உதவி பிரிவுக்கு தகவல் தெரிவிக்கும் எஸ்.ஓ.எஸ் வசதி உள்ளது. ஏதேனும் அவசரநிலை எனில் வாட்ச்சில் உள்ள பட்டனை அழுத்துவதன் மூலம் அல்லது வாட்ச்சில் தூண்டப்படும் அதிர்வுகளால் அவசர உதவி எண்களுக்கு இருப்பிடத்துடன் கூடிய தகவல் அனுப்பப்படும்.
 
அந்தவகையில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச், விபத்தில் சிக்கி மயக்கமடைந்த நபரை மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் வந்ததால், அவர் தற்போது காப்பாற்றப்பட்டு நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்