Paristamil Navigation Paristamil advert login

பேஸ்புக் மெசன்ஜரின் அறிமுகமாகும் புதிய வசதி!

பேஸ்புக் மெசன்ஜரின் அறிமுகமாகும் புதிய வசதி!

29 ஆவணி 2021 ஞாயிறு 09:17 | பார்வைகள் : 14996


உலகின் முதனிலை சமூக ஊடக வலையமைப்புக்களில் ஒன்றான பேஸ்புக் அதன் மெசன்ஜர் செயலியில் சில புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

 
மெசன்ஜர் அறிமுகம் செய்யப்பட்டு பத்து வருடங்கள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இந்த புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
 
மெசன்ஜரில் நண்பர்களுக்கு இடையில் கருத்துக் கணிப்பு செய்யக்கூடிய புதிய அம்சமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
நண்பர்கள் வட்டாரத்திற்குள் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக் கணிப்புக்களை நகைச்சுவையாக மேற்கொள்ள இந்த புதிய அம்சம் வழியமைக்கின்றது.
 
 நண்பர்களின் பிறந்த நாளைக்கு பேஸ்புக் மூலம் பணம் அனுப்பி வைப்பதற்கு ஏதுவான ஓர் அம்சமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
 
 எனினும் இது அமெரிக்காவில் மட்டுமே சாத்தியமாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் வசிக்கும் முகநூல் மெசன்ஜர் பயனர்கள் அவர்களது நண்பர்களின் பிறந்த நாளில் பணப் பரிசில்களை பாதுகாப்பாக பகிர்ந்து கொள்ள முடியும்.
 
 பிறந்த நாள் கொண்டாட்டங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கான பல்வேறு புதிய விடயங்களை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
 
 பேஸ்புக் கான்டெக்களை பகிர்ந்து கொள்ளவும் மெசன்ஜரின் ஊடாக முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. 
 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்