Paristamil Navigation Paristamil advert login

ஜூம் செயலியின் புதிய அப்டேட்டால் மாணவர்கள் அதிர்ச்சி!

ஜூம் செயலியின் புதிய அப்டேட்டால் மாணவர்கள் அதிர்ச்சி!

15 ஆவணி 2021 ஞாயிறு 13:11 | பார்வைகள் : 9405


கொரோனா காரணமாக வீட்டில் இருக்கும் மாணவர்கள், ஜூம் (Zoom) உள்ளிட்ட வீடியோ செயலிகளைப் பயன்படுத்தி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கின்றனர். நேரில் பார்த்துக்கொள்ள முடியாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும்போது ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கின்றனர். சவாலான இத்தகைய நேரத்தில் பாடம் எடுப்பது என்பது ஆசிரியர்களுக்கு கடினமாக இருக்கும் சூழலில் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் ஒருவரையொருவர் பார்த்துகொள்ளும்போது, கவனச் சிதறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

 
இதனால், டீச்சர்கள் மட்டும் அனைத்து மாணவர்களையும் பார்க்கும் வகையிலும், மாணவர்கள் ஆசிரியர்களை மட்டுமே பார்க்கும் வகையில் Focus mode என்ற புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அப்டேட் மூலம் ஹோஸ்ட் மற்றும் ஆசிரியர்கள் அனுமதி கொடுக்கும் மற்றொரு கோ-ஹோஸ்ட் ஆகியோர் அனைத்து செட்டிங்ஸூகளையும் உபயோகிக்க முடியும். ஒருவகையில் மாணவர்களுக்கு இந்த அப்டேட் கவலையைக் கொடுத்தாலும், ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியானதாக அமைந்துள்ளது.
 
இந்த அப்டேட்டை ஜூம் செயலியில் எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
 
1. ஜூம் செயலியில் admin போர்டலில் Sign செய்து கொள்ள வேண்டும்.
 
2. Account Managemen - ஆப்சனை கிளிக் செய்து நேவிகேஷன் பேனலில் இருக்கும் Account Settings - ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்
 
3. பின்னர், Meeting tab - ஐ கிளிக் செய்ய வேண்டும்
 
4. Meeting ஆப்சனுக்கு கீழ் Focus Mode ஆப்சன் இருக்கும். அதனை உங்கள் விருப்பத்தின்பேரில் enable அல்லது disable செய்து கொள்ளுங்கள்.
 
5. அப்போது, வெரிபிகேஷனுக்காக மீண்டும் ஒருமுறை enable அல்லது disable கேட்கும். அதில், ஏற்கனவே கூறியதுபோல் உங்கள் விருப்பத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
 
ஜூம் செயலியைப் போல் கூகுள் மீட் (Google Meet) செயலியும் புதிய அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது. தற்போது புதியதாக 2 அப்டேட்டுகளை கூகுள் மீட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 25 கோ-ஹோஸ்ட் வரை ஒரே நேரத்தில் அனுமதிக்கும் அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இதனால், ஹோஸ்டுக்கு இருக்கும் அனைத்து செட்டிங்ஸ் ஆப்சன்களையும் கோ-ஹோஸ்டாக இருப்பவர்களும் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் ஆன்டிராய்டு யூசர்களும், ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் ஐ.ஓ.எஸ் யூசர்களும் கூகுள் மீட்டின் புதிய அப்டேட்டை பயன்படுத்திக்கொள்ளலாம்.
 
இதில் கூகுள் நிறுவனம் ஒரு சில கட்டுப்பாடுகளையும் வைத்துள்ளது. அனைத்து யூசர்களுக்கும் இந்த புதிய அப்டேட் கிடைக்காது. கூகுளின் நெறிமுறைகளுக்கு கீழ் வரும் யூசர்கள் மட்டுமே புதிய அப்டேட்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்