வேவுத் தொழில்நுட்பங்களின் விற்பனை மீது தடை விதிக்குமாறு கோரிக்கை!

25 ஆடி 2021 ஞாயிறு 11:04 | பார்வைகள் : 14733
வேவுத் தொழில்நுட்பங்களின் விற்பனையையும் பயன்பாட்டையும் தடை செய்யும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திறன்பேசிகளை வேவு பார்ப்பதற்கு Pegasus spyware எனும் இஸ்ரேலிய வேவு நச்சுநிரல் (Malware) பயன்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள வேளையில், Amnesty International அமைப்பு அந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
நச்சுநிரல் வழி, சில நாடுகளின் நிருபர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசாங்கத் தலைவர்கள் வேவு பார்க்கப்படுவதாகக் கூறப்படுவது, மனித உரிமைக்கான உலகளாவிய நெருக்கடியை வெளிப்படுத்தியுள்ளது என்று அமைப்பு சொன்னது.
NSO குழுமத்தின் Pegasus மென்பொருள் வழி, கைத்தொலைபேசிகளின் கேமராவையும், ஒலிபெருக்கியையும் வல்லந்தமாகச் செயல்படுத்தமுடியும்.
அதன் மூலம், தரவுகளையும் சேகரிக்கமுடியும்.
அண்மையில், அந்த நச்சுநிரல் இலக்காகக் கொண்டிருக்கக்கூடிய சுமார் 50,000 பேரின் பட்டியல் கசிந்தது.
Amnesty International, பிரெஞ்சு ஊடகமான Forbidden Stories ஆகியவை மற்ற சில ஊடக நிறுவனங்களுடன் சேர்ந்து பட்டியலை ஆராய்ந்து, வெளியிட்டன.
அதை அடுத்து, கட்டுப்பாட்டுக் கட்டமைப்பு உருவாக்கப்படும் வரை, வேவுத் தொழில்நுட்பங்களின் விற்பனையையும் பயன்பாட்டையும் தடை செய்ய வேண்டும் என்று Amnesty International கோரியது.
இணையக் கண்காணிப்புத் துறை மீது கூடுதல் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு, சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அமைப்பு கூறியது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025