Paristamil Navigation Paristamil advert login

மெய்மறந்து கையடக்க தொலைபேசி பார்ப்பவர்களுக்கு அறிமுகமாகும் கருவி..!

மெய்மறந்து கையடக்க தொலைபேசி பார்ப்பவர்களுக்கு அறிமுகமாகும் கருவி..!

9 ஆனி 2021 புதன் 12:22 | பார்வைகள் : 9051


சாலைகளில் நடக்கும் போது எதிரே வாகனங்கள் வந்தாலும், ஆட்கள் வந்தாலும் ஆபத்தை பொருட்படுத்தாமல் மெய்மறந்து செல்போன்களுடன் நடப்பவர்களை உஷார் படுத்தும் கருவி ஒன்றை தென்கொரிய வடிவமைப்பாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

 
ரோபாட்டிக் கண் என கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இதற்கு மூன்றாம் கண் என Paeng Min-wook என்ற அந்த 28 வயது வடிவமைப்பாளர் பெயரிட்டுள்ளார்.
 
செல்பொனை பார்ப்பதற்காக தலையை குனியும் போது, சென்சர் உதவியுடன் இந்த மூன்றாவது கண் திறக்கும். 2 மீட்டருக்குள் எதிரே வாகனமோ வேறு ஆட்களோ, மோதும் வகை
யில் வந்தால் பீப் பீப் ஒலி எழுப்பி இந்த மூன்றாவது கண் எச்சரித்து ஆபத்தில் இருந்து தப்ப உதவும்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்