இலங்கையிலிருந்து தங்கத்தை கடத்த முற்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

11 ஆடி 2023 செவ்வாய் 06:19 | பார்வைகள் : 10981
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் 814 கிராம் தங்கத்தை கடத்த முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சந்தேகத்தின் பேரில் குறித்த பெண்ணை தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1