Paristamil Navigation Paristamil advert login

விபத்தில் சிக்கியவரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்...!

விபத்தில் சிக்கியவரின் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்...!

25 புரட்டாசி 2019 புதன் 09:28 | பார்வைகள் : 8546


 அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய தனது தந்தையின் உயிரை காப்பாற்ற, அவர் அணிந்திருந்த ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் உதவியதாக மகிழ்ச்சியுடன் இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 
வாஷிங்டன் மாநிலத்திலுள்ள ஸ்பொப்க்கேன் நகரை சேர்ந்த கேப் பர்டெட் என்பவர், இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த அவரது தந்தை பாப்பின் வருகைக்காக காத்திருந்த போது அவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச்சில் இருந்து ஒரு தகவல் கிடைத்தது. அவரது தந்தை அணிந்திருந்த ஆப்பிள் கைக்கடிகாரம் கீழே விழுந்துவிட்டது என்றும், தந்தை எந்த இடத்தில் இருகிறார் என்ற விவரமும் அந்த தகவலில் இடம்பெற்றிருந்தது.
 
அதனைத் தொடர்ந்து விபரீதத்தை உணர்ந்து கொண்ட பர்டெட், அவசர சிகிச்சை மையத்தை தொடர்பு கொண்டு விபத்து நிகழ்ந்த இடத்தை தெரிவித்துள்ளார். அடுத்த அரை மணி நேரத்தில் மருத்துவமனை ஒன்றில் அவரது தந்தை இருக்கிறார் என்ற தகவலும் அந்த வாட்ச் மூலம் பர்டெட்டுக்கு தகவல் கிடைத்தது.
 
தனது தந்தையின் உயிரைக் காப்பாற்ற ஆப்பிள் வாட்ச்சின் அற்புதமான தொழில்நுட்பம் உதவியது குறித்து பர்டெட் மகிழ்ச்சி தெரிவித்து பேஸ்புக்கில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ஆப்பிள் வாட்ச் வைத்திருப்பவர்கள் ஹார்டு ஃபால் டிடெக்சன் என்ற செட்டப்பை பாதுகாப்புக்காக வைத்துக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
அந்த பதிவை ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக்கும் லைக் செய்துள்ளார். ஆப்பிள் வாட்ச் மூலம் அதை அணிபவரின் இதய துடிப்பையும் அறியமுடியும் என்பதால், அதன் மூலம் சிலர் வழக்கத்திற்கு மாறான இதயதுடிப்பை அறித்து, உரிய சிகிச்சை பெற்று உயிர்பிழைத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்