பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக விசாரணை! தொடரும் குற்றச்சாட்டுகள்
8 புரட்டாசி 2019 ஞாயிறு 03:48 | பார்வைகள் : 8589
பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளர்களின் தகவல்களைத் தவறாக பயன்படுத்துவதாக பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் இதுகுறித்து விசாரணை செய்யவுள்ளதாக நியூயோர்க் மாகாண சட்டமா அதிபர் லெடிஷியா ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.
புளோரிடா, அயோவா, நெப்ராஸ்கா, வடக்கு கரோலினா, ஒஹையோ, டென்னிசி, கொலராடோ ஆகிய 7 மாகாணங்கள் சார்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டின் நுகர்வோர் சட்டங்களை உலகின் மிகப் பெரிய சமூக வலைதளமான முகநூல் நிறுவனம் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, வணிக ஏகபோகத்துடன் திகழ பயனாளர்களின் தகவல்களை தவறாகப் பயன்படுத்தவில்லை எனவும், இணையத்தில் பிற நபர்களுடன் தொடர்புகொள்ள அவர்களுக்கு பல விருப்பத் தேர்வுகள் உள்ளன எனவும் பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.