Paristamil Navigation Paristamil advert login

iPhone கைத்தொலைபேசிகளில் தகவல் ஊடுருவல்!

iPhone கைத்தொலைபேசிகளில் தகவல் ஊடுருவல்!

31 ஆவணி 2019 சனி 03:24 | பார்வைகள் : 9465


குறைந்தது கடந்த ஈராண்டு காலமாக iPhone கைத்தொலைபேசிகள் ஊடுருவப்பட்டுள்ளதாக Google பாதுகாப்பு நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
கைத்தொலைபேசிக்குச் சொந்தக்காரர் இருக்கும் இடம், அவருடைய படங்கள் உள்ளிட்ட தகவல்களை ஊடுருவும் மென்பொருள் இணையத்தளங்கள்வழி கைத்தொலைபேசிகளில் பொருத்தப்பட்டன.
 
Telegram, WhatsApp, iMessage ஆகியவற்றிலுள்ள தகவல்களும் ஊடுருவப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
iPhone கைத்தொலைபேசிகளிலுள்ள Gmail மின்னஞசல் சேவை பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
iOS 10இலிருந்து தற்போதைய iOS 12 வரை குறிப்பிட்ட ஒருவகைக் கைத்தொலைபேசியைக் குறிவைக்காமல் அனைத்தும் ஊடுருவப்பட்டதாகக் கூறுகின்றனர் நிபுணர்கள்.
 
தகவல் ஊடுருவல் குறித்து பிப்ரவரியில் Appleஇடம் தெரிவித்ததாக Google கூறியது. அதனையடுத்து iOS 12.1இல் அதற்கான பாதுகாப்பு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்