ஐபோன் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

27 ஆவணி 2019 செவ்வாய் 11:46 | பார்வைகள் : 12268
உலகின் பிரபல கைபேசி உற்பத்தி நிறுவனமான அப்பிள், தனது பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அப்பிள் நிறுவனம் 12.4 என்ற புதிய மென்பொருள் ஒன்றை வெளியிடும் போது ஏற்பட்ட மிகபெரிய தவறு காரணமாக ஐபோன் பயனாளர்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் புதிய பதிப்பின் மூலம் ஏற்பட்ட தவறை சரி செய்ய அப்பிள் நிறுவனம் மாற்று நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பழைய பதிப்பினால் ஏற்பட்ட தவறினால் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளிநபர்களின் கைகளுக்கு செல்லும் ஆபத்து ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் பாதுகாப்பு சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஹெக்கர்கள் இலகுவாக ஐபோன்களுக்குள் நுழைவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளமை சில தினங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதிய பதிப்பினை கைபேசிகளுக்கு பதிவு செய்து கொள்வதன் மூலம் ஏற்படவுள்ள ஆபத்தினை தடுக்க முடியும். அந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியாத கையடக்க தொலைபேசிகளுக்கு ஓரிரு நாட்களில் அந்த வசதி வழங்கப்படும். அதனை புதுப்பிப்பதன் மூலம் ஹெக்கர்களின் கைகளுக்கு செல்லும் தரவுகளை பாதுகாத்து கொள்ள முடியும் என அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1