கூகுள் குரோம் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
27 ஆடி 2019 சனி 02:28 | பார்வைகள் : 9268
கூகுள் குரோம் உலாவியில் பயன்படுத்தப்படும் சில நீட்சிகள் பயனர்களின் அனுமதியின்றி அவர்களின் தரவுகளை திருடுவதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்தது.
இதனை அடுத்து கூகுள் நிறுவம் இப் பிரச்சினைக்கு தீர்வினை தருவதற்கு முன்வந்துள்ளது.
கூகுள் நிறுவனம் கடந்த மே மாதத்தில் குரோம் நீட்சிளுக்கான புதிய அப்டேட்டினை அறிமுகம் செய்யுமாறும், அவற்றிற்கான தனியுரிமைக் கொள்கைகளை பதிவிடுமாறும் நீட்சி வடிவமைப்பாளர்களை கோரியிருந்தது.
அத்துடன் குரோம் நீட்சிகள் தொடர்பில் பாதுகாப்புக்களை மேம்படுத்துவதற்கு இறுக்கமாக நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதற்கு தற்போது முன்வந்துள்ளது.
தவிர குரோம் வெப் ஸ்டோரில் உள்ள பாதுகாப்பற்ற நீட்சிகளை நீக்வுதற்கும் கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் காரணமாக பயனர்களின் அந்தரங்க தரவுகள் களவாடப்படுவது தொடர்பில் உறுதிவழங்கவுள்ளது.