Facebookஐ விட்டு நிரந்தரமாக வெளியேறுங்கள்! எச்சரிக்கும் ஆப்பிள் நிறுவனர்
12 ஆடி 2019 வெள்ளி 03:14 | பார்வைகள் : 9250
பேஸ்புக் நிறுவனத்தை விட்டு நிரந்தரமாக வெளியேறுங்கள் என ஆப்பிள் நிறுவன நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஒஸ்னைக் தெரிவித்துள்ளார்.
அனைவராலும் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை பாதுகாப்பாக வைத்திருப்பதாக தெரிவிக்கிறது. ஆனால், அவ்வப்போது பயனர்களின் தகவல் பேஸ்புக் மூலம் திருடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஆப்பிள் நிறுவன நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஒஸ்னைக்கிடம் பேஸ்புக் தகவல் திருட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதில் அளித்தது வியக்கதக்க வகையில் இருந்தது. அவர் கூறியதாவது,
சமூக வலைதளங்களால் நன்மைகள் இருந்தாலும் அதற்கு ஈடாக நாம் நம்முடைய பிரைவசியை கொடுக்கிறோம். உங்கள் இதயத்தின் துடிப்பைக் கூட சென்சார் மூலம் அவர்களால் தெரிந்துகொள்ள முடியும்.
தனிப்பட்ட முறையில் அனுப்பும் தகவல்களையும் அவர்களால் கண்காணிக்க முடியும். இதையெல்லாம் தடுக்க ஒரே வழி என்னவென்றால், பேஸ்புக்கில் இருந்து வெளியேறுங்கள்.
இது பலருக்கும் கடினமானதாக இருக்கலாம். ஆனால் உங்களது பிரைவசியை கொடுப்பதைவிடவும் பேஸ்புக்கில் இருந்து வெளியேறுவது எளிது என தெரிவித்துள்ளார்.