அதிரடி நடவடிக்கை எடுத்த பேஸ்புக்! 30 லட்சம் கணக்குகள் நீக்கம்
26 வைகாசி 2019 ஞாயிறு 13:18 | பார்வைகள் : 2222
பேஸ்புக்கில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை 30 லட்சம் போலி கணக்குகளை நீக்கி உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் பேஸ்புகில் போலி கணக்குகள் உருவாக்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதில் 30 லட்சம் போலி கணக்குகள் உருவாக்கப்பட்ட சில நிமிடங்களில் கண்டறிந்து நீக்கி உள்ளதாகவும், இது அதற்கு முந்தைய ஆறு மாதங்களில் நீக்கப்பட்ட போலி கணக்குகளை விட இரு மடங்கு அதிகம் என்றும் பேஸ்புக் தெரவித்துள்ளது.
கடந்த 6 மாதங்களில் வெறுப்பை பரப்பும் வகையிலும், விதிமுறைகளை மீறும் வகையிலும் இருந்த 73 லட்சம் பதிவுகளை நீக்கி உள்ளதாகவும், இது அதற்கு முந்தைய 6 மாதங்களில் நீக்கப்பட்ட பதிவுகளை விட 54 லட்சம் அதிகம் என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.