Huawei பயனாளர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்!
20 வைகாசி 2019 திங்கள் 17:59 | பார்வைகள் : 2700
கூகள்(Google), Huawei நிறுவனத்துடனான சில வர்த்தகச் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
வன்பொருள்(hardware), மென்பொருள், தொழில்நுட்பச் சேவைகள் ஆகியவற்றை மாற்றிவிடத் தேவைப்படும் வர்த்தகச் செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
பொது உரிமத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் வர்த்தகச் செயல்பாடுகள் பாதிக்கப்பட மாட்டா என்று Reuters செய்தி நிறுவனம் தெரிவித்தது.
Huawei திறன்பேசிகளில் Google செயலிகளைக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அந்தச் செயலிகளைப் பயன்படுத்த முடியும்.
செயலியின் மேம்பாடுகளையும் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று Google நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
கூகளின் நடவடிக்கையால் Androidஇல் இயங்கும் வருங்கால Huawei கைத்தொலைபேசிகளில் Google Play Store, Gmail போன்றவை இடம்பெற மாட்டா.