Facebookஇல் அறிமுகமாகும் புதிய கட்டுப்பாடுகள்!
19 வைகாசி 2019 ஞாயிறு 11:52 | பார்வைகள் : 2414
கிரைஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து Facebook அதன் நேரலை (Live) சேவைகளுக்கான புதிய கட்டுப்பாட்டு விதிகளை வெளியிட்டது.
கிரைஸ்ட்சர்ச் பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டைத் தாக்குதல்காரர் Facebook பக்கத்தில் நேரடியாக வெளியிட்டார். அதைப் பலர் இணையத்தில் பகிர்ந்தனர்.
இணையத்தில் இதுபோன்ற வன்செயல்கள் தொடர்பான நேரலைகளைக் கட்டுப்படுத்துமாறு Facebook நிறுவனத்திற்கு நெருக்குதல் அதிகரித்தது.
Facebook பக்கத்தில் முதல்முறை விதிமீறலில் ஈடுபடுவோருக்கு நேரலை செய்ய தற்காலிகத் தடைவிதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
விதிமீறலின் கடுமைக்கு ஏற்றவாறு தடையின் காலம் நீட்டிக்கப்படலாம் என்றும் Facebook கூறியது.
கட்டுப்பாடுகள் கூடிய விரைவில் எல்லா நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அது சொன்னது.
இணையத்தில் பகிரப்படும் வன்செயல் தொடர்பான காணொளிகளைத் தடைசெய்வதுகுறித்து பாரிஸில் உலகத் தலைவர்கள் சந்தித்துப் பேசவிருக்கும் வேளையில் Facebook அதன் நேரலை விதிமீறல் கட்டுப்பாடுகள் குறித்து அறிவித்துள்ளது.