Gmailஇல் அறிமுகமாகும் புதிய வசதி!
11 சித்திரை 2019 வியாழன் 08:54 | பார்வைகள் : 9411
கூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை இலகுவாக்கக்கூடிய புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வசதியே Smart Compose ஆகும்.
இதன் மூலம் பயனர் ஒருவர் சில எழுத்துக்களை தட்டச்சு செய்யும்போது அவர் எதிர்பார்க்கும் சில முடிவுகளை வழங்கும்.
இதில் பொருத்தமான சொல்லை தெரிந்தெடுக்க முடியும்.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதியின்படி பயனர் ஒருவர் மின்னஞ்சலின் உள்ளடக்கத்தை தட்டச்சு செய்ததன் பின்னர் விடயத்தை தட்டச்சு செய்ய முற்படும்போது உள்ளடக்கத்திற்கு ஏற்ற விடயத்தை தானாகவே தெரிந்தெடுக்கின்றது.
இதனால் மின்னஞ்சல் ஒன்றினை மேலும் விரைவாக உருவாக்கிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.