பப்ஜி விளையாட்டுக்கு வருகிறது நேரக் கட்டுப்பாடு!
26 பங்குனி 2019 செவ்வாய் 05:33 | பார்வைகள் : 8865
பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாவதைத் தடுக்கும் நோக்கில் பப்ஜியை உருவாக்கிய நிறுவனம் புதிய விடயத்தை குறித்த விளையாட்டில் சேர்த்துள்ளது.
அதன்படி தொடர்ந்து அதிக நேரம் பப்ஜி விளையாடும் போது திரையில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறும்.
ஹெல்த் ரிமைண்டர் என அழைக்கப்படும் இந்த அம்சம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து பப்ஜி விளையாட முற்படும் போது, விளையாட்டை நிறுத்திவிடும். பின்னர் குறிப்பிட்ட நேரம் முடிந்தபின் மீண்டும் விளையாட முடியும். இது தொடர்ந்து அதிக நேரம் பப்ஜி விளையாடுவோருக்கு இடைவெளி போன்று அமைகிறது.
பப்ஜி விளையாடுவோரில் 18 வயதுக்கு உட்பட்டவர்களிடம் ஹெல்த் ரிமைண்டர்களை செயற்படுத்த குறித்த விளையாட்டு செயலி கோருகிறது. இந்த அம்சம் செயற்படுத்தப்பட்டதும் தொடர்ந்து ஆறு மணி நேரங்களுக்கும் அதிகமாக பப்ஜி விளையாடினால் விளையாட்டு தானாக நிறுத்தப்பட்டுவிடும்.
இதனிடையே, பப்ஜி விளையாடுவோர் மத்தியில் ஹெல்த் ரிமைண்டர் அம்சத்திற்கு கலவையான விமர்சங்கள் எழுந்துள்ளன. சிலர் திடீரென விளையாட்டு நிறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். 18 வயத்துக்கும் அதிகமானவர்களுக்கும் குறித்த ரிமைண்டர் வருவதாக சிலர் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த விளையாட்டுக்கு எதிர்ப்புக்குரல் எழுப்புவோருக்கு சற்று ஆறுதலான விஷயமாகவே இது அமைகின்றது.