அன்ரோயிட் அப்பிளிக்கேஷன்கள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!
22 பங்குனி 2019 வெள்ளி 07:20 | பார்வைகள் : 8921
கூகுள் நிறுவனம் தனது கூகுள் பிளே ஸ்டோரில் காணப்படும் அப்ளிக்கேஷன்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றது.
இவற்றில் பயனர்களின் தகவல்களை திரட்டுதல் உட்பட தனிநபர் பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடிய புரோகிராம்கள் காணப்படுவதனால் பயனர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது.
இவ்வாறான நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் பிளே ஸ்டோரில் காணப்படும் 200 வரையான அப்பிளிக்கேஷன்களில் Adware எனும் வைரஸ் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அப்பிளிக்கேஷன்கள் அனைத்தும் சுமார் 150 மில்லியனிற்கும் அதிகமான தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூகுள் நிறுவனம் குறித்த அப்பிளிக்கேஷன்களை பிளே ஸ்டோரிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.