செவ்வாய் கிரகத்திற்கு செல்ல தயாராகும் பெண் விண்வெளி வீராங்கனை!
17 பங்குனி 2019 ஞாயிறு 14:41 | பார்வைகள் : 8789
செவ்வாய் கிரகத்திற்கு முதன் முதலாக பெண் விண்வெளி வீராங்கனைதான் செல்வார் என்று நாசாவின் நிர்வாக அதிகாரி ஜிம் ப்ரைடன்ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா 1970ஆம் ஆண்டு முதல் பெண்களை பணியமறித்திவருகிறது. தற்போது நாசாவில் உள்ள விண்வெளி வீரர்களில் 34 சதவீதம் பேர் பெண்களாகவுள்ளனர். அமெரிக்காவில் மார்ச் மாதம் பெண்கள் மாதமாக கொண்டாடப்படுகிறது. இதனால் நாசா அதன் விண்களங்களில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது.
இந்நிலையில் நாசாவின் நிர்வாக அதிகாரி ஜிம் ப்ரைடன்ஸ்டெயின் ‘சயின்ஸ் ஃபரைடே’ என்ற வானொலி நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அதில் அவர், “செவ்வாய் கிரகத்திற்கு போகும் முதல் நபர் பெண்ணாகதான் இருப்பார். அத்துடன் நிலவிற்கு செல்லும் அடுத்த நபரும் பெண் தான். மேலும் இந்த மாத இறுதியில் இரண்டு பெண் விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நடை மேற்கொள்ளவுள்ளனர். இதன்மூலம் நாசாவிலுள்ள அனைத்து திறமைகளை பயன்படுத்தவுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, நாசாவின் விண்வெளி வீராங்கனைகளான அன்னே மேக்லேன் மற்றும் கிறிஸ்டினா கோச் வரும் 29ஆம் தேதி விண்வெளி நடை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தது. அந்த விண்வெளி நடையில் அவர்கள் 7 மணி நேரம் நிகழ்த்த போவதாக நாசா தெரிவித்துள்ளது. இதுவே முதல் முறையாக பெண்கள் மேற்கொள்ளும் விண்வெளி நடை என்பது குறிப்பிடத்தக்கது.