Paristamil Navigation Paristamil advert login

உங்கள் நாட்டு மொழியில் WhatsApp பயன்படுத்துவது எப்படி?

உங்கள் நாட்டு மொழியில் WhatsApp பயன்படுத்துவது எப்படி?

12 பங்குனி 2019 செவ்வாய் 10:43 | பார்வைகள் : 8733


மிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி செயலியை இன்று உலகளவில் 200 மில்லியனிற்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

 
இச்செயலியினை ஏராளமான மொழிகளில் செயற்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.
 
அதேபோன்று இந்தியாவில் 10 உள்நாட்டு மொழிகளில் பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது.
 
இதில் தமிழ், ஹிந்தி, பெங்காலி, பஞ்சாபி, தெலுங்கு, மராத்தி, உருது, குஜராத்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என்பன அடங்கும்
 
இதனை செயற்படுத்துவதற்கு முதலில் வாட்ஸ் ஆப்பினை இயக்க வேண்டும்.
 
அதன் பின்னர் மெனு பொத்தானை கிளிக் செய்து செட்டிங்ஸ் பகுதிக்கு செல்ல வேண்டும்.
 
பின்னர் Chat and Open App Language என்பதை கிளிக் செய்து தோன்றும் பொப்அப் மெனுவில் விரும்பிய மொழியினை தெரிவு செய்ய வேண்டும்.
 
எனினும் கைப்பேசிகளின் சிறப்பம்சங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த வசதிகள் கிடைக்கப்பெறும்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்