Paristamil Navigation Paristamil advert login

பேஸ்புக்கில் விரைவில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

பேஸ்புக்கில் விரைவில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

28 மாசி 2019 வியாழன் 06:14 | பார்வைகள் : 8732


பேஸ்புக்கில் விரைவில் Clear History Option நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

 
கடந்த ஆண்டு சுமார் 5,60,000 இந்தியர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற நிறுவனம் திருடியதாக பேஸ்புக் ஒப்புக்கொண்டதுடன், அதற்கு மன்னிப்பும் கோரியது.
 
உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பேஸ்புக் எனும் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வரும் நிலையில், பேஸ்புக் நிறுவனம் தனது தவறை ஒப்புக் கொண்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
 
மேலும் பேஸ்புக் என்பது பொழுதுபோக்கையும் தாண்டி, சிறிய கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை தங்களது நிறுவன பொருட்களுக்கு விளம்பரம் கொடுக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
இணையத்தில் நாம் ஏதோ ஒரு பொருளைக் குறித்து தேடினாலோ அல்லது பேஸ்புக் பக்கத்தில் இருக்கும் விளம்பரத்தை Click செய்தாலோ அது நம்மை துரத்திக் கொண்டே இருக்கும்.
 
நாம் இணையத்தின் எந்தப் பக்கத்துக்கு சென்றாலும், நாம் தேடிய பொருளின் விளம்பரங்கள் வந்துகொண்டே இருக்கும். இதற்கு காரணம், நாம் பேஸ்புக்கில் செய்யும் ஒவ்வொரு தேடலும் ஒரு History போல பதிவாகும்.
 
அதனை வைத்து தான் மூன்றாம் தரப்பு விளம்பர நிறுவனங்கள் நம்மை குறி வைக்கின்றன. இது ஒரு விளம்பர உத்தி என்று கூறப்பட்டாலும், பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக Clear History Option-ஐ கொண்டு வரவுள்ளதாக பேஸ்புக் அறிவித்துள்ளது. இந்த Option-ஐ கொண்டு வருவதன் மூலம், மூன்றாம் தரப்பு விளம்பர நிறுவனங்களும், இணையப்பக்கங்களும் உங்களின் தகவல்களை சேர்த்து வைக்க முடியாது.
 
ஒருமுறை உங்களது History Delete செய்யப்பட்டால் சேமிக்கப்பட்ட தகவல்கள் அழிந்துவிடும். இந்த Clear History Option விரைவில் நடைமுறைக்கு வரும் என பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி பார்சிலோனாவில் நடைபெற்ற தொலைத்தொடர்பு ஊடகங்களுக்கான ஆலோசனைக் கூடத்தில் தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக நாம் தேடுவதையும், நம்முடைய ஒவ்வொரு Click-யையும் கூட பேஸ்புக் கண்காணிப்பது ஏற்கத்தக்கதல்ல என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்