Samsung நிறுவம் வெளியிடும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்!
3 மாசி 2019 ஞாயிறு 06:02 | பார்வைகள் : 9201
சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விளம்பர வீடியோ இணையத்தில் தவறுதலாக வெளியாகி பின் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டது.
சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் 2018 டெவலப்பர் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற விழாவில் சாம்சங் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை பொது வெளியில் அறிமுகம் செய்தது.
அந்த வகையில் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விளம்பர வீடியோ தவறுதலாக வெளியாகிவிட்டது. இந்த வீடியோவில் காணப்படும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளிப்புறம் பெரிய டிஸ்ப்ளே மற்றும் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் உள்புறம் கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு டெவலப்பர் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் 7.3 இன்ச் 1536x2152 பிக்சல் டிஸ்ப்ளேவும், மடிக்கப்பட்ட நிலையில் வெளிப்புறம் 4.6 இன்ச் 840x1960 பிக்சல் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் சோனி IMX374 சென்சார் வழங்கப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் செய்தியாளர்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் புதிய சாதனத்தின் உற்பத்தி பணிகள் துவங்கியிருப்பதாக கூறப்பட்டது. மேலும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் வீடியோவை பார்க்கும் போது சாம்சங் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 20 ஆம் தேதி சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணையத்தில் வெளியாகி பின் நீக்கப்பட்ட சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விளம்பர வீடியோவை கீழே காணலாம்.,