Paristamil Navigation Paristamil advert login

நூற்றுக்கணக்கான பேஸ்புக் கணக்குகள் முடக்கம்! அதிர்ச்சியில் பயனாளர்கள்

நூற்றுக்கணக்கான பேஸ்புக் கணக்குகள் முடக்கம்! அதிர்ச்சியில் பயனாளர்கள்

20 தை 2019 ஞாயிறு 05:52 | பார்வைகள் : 8134


முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கிற்கு சவாலான விடயங்களாக போலியான தகவல்கள் பரப்பப்படுதல் மற்றும் அனுமதியற்ற அரசியல் விளம்பரங்கள் என்பன காணப்படுகின்றன.

 
இதற்காக பல போலியான கணக்குகளும் உருவாக்கப்படுகின்றன.
 
இதனைத் தடுப்பதற்காக பேஸ்புக்கின் விசேட குழு தீங்கு பயக்கும் பேஸ்புக் பக்கங்கள் மற்றும் கணக்குகள் என்பனவற்றினை நீக்கி வருகின்றது.
 
இதன் தொடர்ச்சியாக தற்போது 500 வரையிலான பேஸ்புக் பக்கங்கள் மற்றும் கணக்குகளை நீக்கியுள்ளது.
 
இக் கணக்குகளின் ஊடாக போலியான செய்திகள் பரப்பப்பட்டு வந்ததாகவும், இதற்காக பெருமளவிலான பணம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.
 
இப் போலிச் செய்திகள் அனைத்தும் ரஷ்யாவை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டவையாகும்.
 
இதில் 364 பேஸ்புக் பக்கங்கள் மொத்தமாக 790,000 பின்தொடர்பவர்களை கொண்டிருந்ததாகவும் இப் பக்கங்கள் ஊடாக போலி செய்திகளை விளம்பரம் செய்வதற்கு 135,000 டொலர்கள் செலவிடப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்