Paristamil Navigation Paristamil advert login

YouTubeக்கு ஆப்பு வைக்கும் WhatsApp!

YouTubeக்கு ஆப்பு வைக்கும் WhatsApp!

16 மார்கழி 2018 ஞாயிறு 12:52 | பார்வைகள் : 9309


வாட்ஸ் அப் இல் ஏராளமான வசிதிகள் இருந்தாலும் தற்போது இன்னும் அதிகமாக சாட் செய்யும் விதத்தில் பல புதிய வசதிகளை உருவாக்க போவதாகவும் புத்தாண்டிலிருந்து துவக்க போவதாகவும் இந்நிறுவனம் கூறியுள்ளது.
 
கூடிய விரைவில் வாட்ஸ் அப்களில் இந்த வசதிகள் வரும் எனவும், அதற்கான ஆயத்தங்கள் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் இந்நிறுவனம் கூறியுள்ளது.
 
மேலும் தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய வசதிகளில் வீடீயோ பிளே செய்து திரையிலேயே காணக்கூடியதாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.
 
இப்போது  விற்பனையாகிக் கொண்டுள்ள ஸ்மார்ட் போன்களில் இந்த வசதி கிடைகும் எனவும் கூறியுள்ளது. அடுத்த வருடம் முதல் செயலிகளிலும் இவ்வசதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
 
வழக்கமாக வாட்ஸ்அப் - ல் ஒரு லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ததும் யூடூப் தளத்திற்கு சென்று வீடியோ பிளே ஆகும். இனி இந்நிறுவனம் அளித்துள்ள புதுவசதியில் தொடு திரையிலேயே ஒரு வீடியோ பிளே ஆகும் என்றும், அதில் சாட்டிங் செய்வதற்கு எந்த இடையூறும் இருக்காது என்றும் பல திரைகள் தோன்றும் வகையில் உருவாக்கப்படுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
 
வாட்ஸ அப் நிறுவனம் வழங்கும் இப்புது வசதியால் பயனாளர்கள் மேலும் பயனடைவார்கள் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்