Paristamil Navigation Paristamil advert login

Instagramஇல் அறிமுகமாகும் புதிய வசதி!

Instagramஇல் அறிமுகமாகும் புதிய வசதி!

2 மார்கழி 2018 ஞாயிறு 08:41 | பார்வைகள் : 8915


இன்ஸ்டாகிராமில் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் என்ற புதிய ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 
இன்ஸ்டாகிராமில் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் என்ற புதிய ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஆப்ஷன் மூலம் ‘Close Friends' க்கான சிறிய குழுவினை உருவாக்கி அதில் ஸ்டோரியினை ஷேர் செய்யலாம். இன்ஸ்டாகிராமினை பயன்படுத்தும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இந்த சிறிய குழுவினை உருவாக்கி பயன்படுத்த முடியும்.
 
பயனர் ஒருவர் நெருக்கமான நண்பர்கள் லிஸ்ட்டில் இருந்தால் அவர்களுடைய புரொஃபைல் போட்டோவிலிருக்கும் பச்சை நிற வட்டத்தில் இருக்கும் ஸ்டோரியை காண முடியும். நீங்கள் அந்த ஸ்டோரியை பார்த்தால், அதில் பச்சை நிற பேட்ஜ் தோன்றும் என்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது.
 
வருவாய் ஈட்டுதலில் இன்ஸ்டாகிராம் வளர்ந்து வருவதால், பேஸ்புக் தனது முழு கவனத்தையும் இன்ஸ்டாகிராம் மீது செலுத்தி வருகிறது. இன்ஸ்டாகிராமில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்த அடாம் மூசோரி அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராமின் இந்த புதிய முயற்சிகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலையில் ஸ்னாப்சாட் உள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்