வரவோ செலவோ..நிர்வகிக்க உதவும் செயலிகள்!
18 கார்த்திகை 2018 ஞாயிறு 13:00 | பார்வைகள் : 9221
நமக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த பலர் அன்றாடம் கணக்கு வழக்குகளைப் பதிவு செய்துவைத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தனர்.
ஆனால் அந்தப் பழக்கம் காலப்போக்கில் மறைந்துவிட்டது. அதை மீண்டும் புதுப்பிக்க வகைசெய்கின்றன பல்வேறு செயலிகள்.
மொத்தம் மூன்று செயலிகள் இருந்தால் போதும்.
--முதல் செயலி உங்கள் வரவு செலவைத் திட்டமிட உதவவேண்டும்.
Wallet போன்ற செயலிகளில், வரவு செலவுத் திட்டம் ஒன்றை வரையலாம், செலவுகளைப் பதிவு செய்யலாம், பதிவுசெய்ய மறந்தால், நினைவூட்டலும் பெறலாம். ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட இலக்கிற்காக ஒதுக்கி வைக்கலாம்.
--அடுத்தது, Seedly போன்ற செயலிகள். இவை இன்னும் ஒரு படி மேலே சென்று, உங்கள் வங்கிக் கணக்குகளையும் தனிப்பட்ட கணக்கையும் இணைக்கும். இதில் சில நிதிச் சேமிப்புத் துணுக்குச் செய்திகளைப் பெறலாம், நிதி நிர்வாகம் தொடர்பில் சிலருடன் கலந்துபேசவும் வழியுண்டு.
--மூன்றாவதாகப் பணத்தை முதலீடு செய்யும் செயலிகள் உங்களுக்கு உதவும். OCBC, DBS ஆகிய சிங்கப்பூர் வங்கிகள் இதற்கென பிரத்யேகச் செயலிகளைக் கொண்டுள்ளன. அவை தவிர, FinAlly.sg, MotleyFool, DollarsAndSense, smartly, Stashaway ஆகியவையும் முதலீட்டுக் குறிப்புகளை வழங்கும் செயலிகள்.
சரி இவ்வளவு செயலிகள் இருந்தால் எதைத் தேர்ந்தெடுப்பது?
உங்கள் கைத்தொலைபேசியில் உள்ள தகவல்களைக் கோரும் செயலிகளைப் பயன்படுத்தாதீர்கள்.
எதைப் பயன்படுத்தினாலும், அது உங்களுக்கு ஒத்துவராவிட்டால், வேறொரு பொருத்தமான செயலிக்கு மாறுங்கள்.