Paristamil Navigation Paristamil advert login

கூகுள் அசிஸ்டன்ட் தொடர்பில் வெளியாகிய மகிழ்ச்சியான தகவல்!

கூகுள் அசிஸ்டன்ட் தொடர்பில் வெளியாகிய மகிழ்ச்சியான தகவல்!

7 பங்குனி 2020 சனி 13:29 | பார்வைகள் : 8645


மொபைல் சாதனங்கள் உட்பட ஏனைய கணினி சாதனங்களிலும் கூகுள் அசிஸ்டன்ட் அப்பிளிக்கேஷனின் பயன்பாடு அதிக அளவில் காணப்படுகின்றது.
 
அதாவது பயனர்கள் தமது குரல் வழி கட்டளைகள் மூலம் பல விடயங்களை செயற்படுத்தவும், அறிந்துகொள்ளவும் முடியும்.
 
இவ்வாறான குறித்த அப்பிளிக்கேஷனானது பல்வேறு மொழிகளில் செயற்படக்கூடியதாக இருக்கின்றது.
 
இதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் சில மொழிகள் உள்ளடக்கப்பட்டு மொத்தமாக 42 மொழிகளில் செயற்படக்கூடிய வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்த 42 மொழிகளுக்கும் Live Translation வசதியும் தரப்பட்டுள்ளது.
 
அதுமாத்திரமன்றி இணையப் பக்கங்களை குறித்த 42 மொழிகளிலும் மொழிபெயர்த்து தரக்கூடியதாக கூகுள் அசிஸ்டன்ட் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்