Paristamil Navigation Paristamil advert login

பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Whatsapp!

பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Whatsapp!

1 மாசி 2020 சனி 10:10 | பார்வைகள் : 9680


 இன்று பல இலட்சக்கணக்கான கைபேசிகளில் மெசேஜிங் சேவையை வழங்கிவரும் வட்ஸ்அப் இயங்காது என தெரியவந்துள்ளது.

 
முகப்புத்தக நிறுவனத்துக்கு சொந்தமான செயலிகள் காலாவதியான இயங்குதளங்களில் மட்டுமே இயங்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ-போன் கருவிகளில் இனி செயல்படாது.
 
வட்ஸ்அப் பயனர்களின் தரவுகளை பாதுகாக்க இதுபோன்ற நடவடிக்கை அவசியம் தேவை என்று வட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
 
மேலும், ஆண்ட்ராய்ட் திறன்பேசியில் 2.3.7 பதிப்பு அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளை வைத்திருப்பவர்களுக்கும், ஆப்பிள் ஐபோனில் ஐஓஎஸ் 8 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளை வைத்திருப்பவர்களுக்கும் வட்ஸ்அப் செயலி இன்றுமுதல் இயங்காது.
 
பரவலான பயன்பாட்டில் இல்லாத இயங்குதளங்களுக்கு வழங்கி வந்த சேவையை வட்ஸ்அப் நிறுவனம் கைவிட்டுள்ளது. இந்இயங்குதளங்கள் பொதுவாக எந்தவொரு புதிய கருவியில் நிறுவவோ அல்லது அப்டேட்டோ செய்யப்படுவதோ கிடையாது.
 
ஒருவேளை வட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த விரும்புவோர் தங்களுடைய கைபேசிகளின் இயங்குதளங்களை அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்