iPhone கைத்தொலைபேசிகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

19 தை 2020 ஞாயிறு 10:42 | பார்வைகள் : 14436
iPhone கைத்தொலைபேசிகளை மின்னூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் Lightning கம்பிவடம் கூடிய விரைவில் மாறலாம்.
கைத்தொலைபேசிகளுக்கான மின்னூட்டக் கம்பிவடத்தை பொதுவாக உலகளவில் அனைத்து கைத்தொலைபேசிகளிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்றும்படி ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
Apple நிறுவனத்தின் பெரும்பாலான சாதனங்களை மின்னூட்டப் பொதுவாக Lightning கம்பிவடம் பயன்படுத்தப்படுகிறது.
USB-C, micro-USB ஆகிய கம்பிவடங்கள் Android கைத்தொலைபேசிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
Apple நிறுவனம் 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட iPad ரக சாதனத்துக்கு மட்டும் lightning மின்னூட்டக் கம்பிவடத்தைப் பயன்படுத்தவில்லை.
ஐரோப்பிய நாடாளுமன்றம் புதிய நெறிமுறைகளை அறிமுகம் செய்தால், ஐரோப்பாவில் விற்கப்படும் Apple சாதனங்கள் புதிய கம்பிவடத்தோடு விற்கப்படலாம்.
நிறுவனம் USB-C கம்பிவடங்களுக்கு அல்லது கம்பிவடமில்லாத மின்னூட்டத்திற்கு மாறலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1