267 மில்லியன் பயனீட்டாளர்களின் தகவல் கசிவு!
21 மார்கழி 2019 சனி 02:44 | பார்வைகள் : 9616
Facebook நிறுவனம், 267 மில்லியன் பயனீட்டாளர்களின் தகவல் கசிந்ததன் தொடர்பில் விசாரணை நடத்திவருவதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் அவர்களின் பெயர்களும் தொலைபேசி எண்களும் இணையத்தில் பகிரப்பட்டன. ஏற்கெனவே குற்றங்களைப் புரிந்தோர், தகவலை ஊடுருவியதில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கசிந்த தகவல்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் களவாடப்பட்டிருக்கலாம் என்கிறது Facebook. பகிரப்பட்ட தகவல்கள் தற்போது நீக்கப்பட்டுவிட்டதாகவும் அது தெரிவித்தது.
அண்மைக் காலத்தில் தகவல் கசிவு சம்பவங்கள் சில வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்நிலையில், பயனீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த முனைந்து வருகிறது Facebook.