பேஸ்புக் பயனாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்!
15 மார்கழி 2019 ஞாயிறு 12:44 | பார்வைகள் : 9275
பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 29,000 பணியார்களின் தரவுகள் உள்ளடங்கிய ஹார்ட் டிஸ்க் ஒன்று களவாடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இக் ஹார்ட் டிஸ்க்கில் குறித்த பணியாளர்களது தனிப்பட்ட விபரங்கள் சேமிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள தரவுகள் எதுவும் என்கிரிப்ட் செய்யப்படாத நிலையில் கார் ஒன்றிலிருந்து திருடப்பட்டுள்ளது.
பணியாளர்களின் பெயர், வங்கி கணக்கு விபரம், சம்பளம் மற்றும் வழங்கப்படும் போனஸ் விபரம் என்பனவற்றுடன் சோசியல் செக்கியூரிட்டி இலக்கத்தின் இறுதி நான்கு டிஜிட்கள் போன்ற பல்வேறு விபரங்கள் திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்கில் காணப்படுகின்றது.
இதனால் தரவுகளை இலகுவாகப் பெற்று தவறான முறையில் பயன்படுத்த முடியும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு அமெரிகாவில் பணியாற்றியவர்களின் தரவுகளே குறித்த ஹார்ட் டிஸ்க்கில் காணப்படுகின்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.