Paristamil Navigation Paristamil advert login

ஐபோன் 11 சீரிஸ் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

ஐபோன் 11 சீரிஸ் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

7 மார்கழி 2019 சனி 14:46 | பார்வைகள் : 8816


ஐபோன் 11 சீரிஸ் மாதிரிகளில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய குறைபாடு மூலம் அப்பிள் நிறுவனம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
 
புதிய ஐ.ஒ.எஸ். 13 இயங்குதளம் கொண்டு இயங்கும் ஐபோன் 11 சாதனங்களில் Location சேவைகள் ஆஃப் செய்யப்பட்டாலும், அவை வாடிக்கையாளர்களின் Location விபரங்களை சேகரிப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும் ஆராய்ச்சியாளரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்திருக்கும் அப்பிள் நிறுவனம், இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் என கூறியுள்ளது.
 
ஐபோன் 11 சீரிஸ் மாதிரிகளில் A1 சிப் (Apple A1 Chip) வழங்கப்பட்டுள்ளது. இந்த சிப் அல்ட்ரா பேண்ட் (Ultra Band) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இது பல்வேறு Wideband சாதனங்களுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தும். இதன் மூலம் Apple AirDrop கொண்டு தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும்.
 
அப்பிள் சேகரிக்கும் தகவல்கள் சாதனத்தில் மட்டும் நடைபெறுகிறது. எதிர்காலத்தில் வரும் ஐ.ஒ.எஸ். அப்டேட்களில் இந்த அம்சத்தை செயலிழக்கச் செய்யும் வசதி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
 
அத்துடன் சில ஆராய்ச்சியாளர்கள் இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்த முயன்று அப்பிள் வாடிக்கையாளர் விபரங்களை சேகரிப்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
 
அதேவேளை அப்பிள் ஏன் இந்த விபகாரத்திற்கு உடனடியாக பதில் அளிக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்