செல்போன் சேவைகளை பெற முக பதிவு கட்டாயம்!
5 மார்கழி 2019 வியாழன் 06:36 | பார்வைகள் : 9378
சீனாவில் புதிய மொபைல் போன் சேவைகளைப் பதிவுசெய்யும் மக்கள் தங்களின் முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய விதிமுறைகளை சீனா, ஞாயிற்றுக்கிழமை முதல் அமல்படுத்தியுள்ளது. மோசடியைத் தடுக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக சீன அரசு கூறி உள்ளது.
நாட்டிலுள்ள லட்சக்கணக்கான இணையதள பயனாளர்களின் அடையாளங்களை அதிகாரிகள் சரிபார்ப்பதற்கு இது அவசியமாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த புதிய விதிமுறை கடந்த 1-ந்தேதி முதல் அமலாகி உள்ளது. சீனாவில் முகத்தை அடையாளங்காணும் தொழில்நுட்பத்தை அந்நாட்டு அரசு ஏற்கனவே பயன்படுத்தி வருகிறது.
பல்பொருள் அங்காடிகள், சுரங்கப்பாதை அமைப்புகள் மற்றும் விமான நிலையங்கள் ஏற்கனவே முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.