இயந்திர மனிதக் கருவிகள், மனிதர்களைப் போலத் தொட்டு உணர முடியுமா?

1 மார்கழி 2019 ஞாயிறு 12:43 | பார்வைகள் : 11960
லண்டனில் இயந்திர மனிதக் கருவிகளுக்குத் தொட்டு உணரும் ஆற்றலை ஏற்படுத்தும் முயற்சிகள் முன்னேற்றம் கண்டுள்ளன.
அதற்காகச் செயற்கை தோலை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இயந்திர மனிதக் கருவிகள் மனிதர்களுடன் அதிக நேரம் செலவிடத் தொடங்கியுள்ளன.
அதிக பலத்தைப் பயன்படுத்தக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ள இயந்திர மனிதக் கருவிகள் தவறுதலாக மனிதர்களைக் காயப்படுத்தக்கூடும்.
மனிதர்களைத் தொடும்போது எவ்வளவு பலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நிர்ணயித்து இயந்திரங்கள் செயல்படப் புதிய தோல் உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புவதாக CNN தெரிவித்துள்ளது.
மனிதர்களின் தொட்டு உணரும் தன்மையை ஆராய்ந்து அதனை அடிப்படையாகக் கொண்டு புதிய தோல் உருவாக்கப்பட்டுள்ளது.
இயந்திர மனிதக் கருவிகளில் 13,000 உணர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக CNN கூறியுள்ளது.
உணர்கருவிகளை அதிக அளவில் உற்பத்தி செய்வது குறித்து ஆய்வாளர்கள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.