மருத்துவரின் உயிரை காத்த ஆப்பிள் வாட்ச்!

27 கார்த்திகை 2019 புதன் 03:20 | பார்வைகள் : 14843
மருத்துவர் ஒருவர் தான் உபயோகித்த ஆப்பிள் வாட்ச் தனது உயிரை காப்பாற்றியுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
பொதுவாக மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் கை கடிகாரத்தில் பல நவீன வசதிகள் கொடுக்கப்பட்டுள்ள. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணம் வகோவைச் சேர்ந்த, 79 வயதான கால்நடை மருத்துவர் டாக்டர் ரே எமர்சன் இவர் ஆப்பிள் வாட்ச் ஒன்றை பயன்படுத்தி வருகிறார்.
இதில் வாட்ச் அணிந்திருப்பவரின் இதய துடிப்பை கண்காணிக்கும் தொழில்நுட்பம் உள்ளது. சமீபத்தில் எமர்சனின் இதய துடிப்பு சீராக துடிக்கவில்லை. இதனை அவர் அணிந்திருந்த ஆப்பிள் நிறுவன வாட்ச் கண்காணித்து, அவருக்கு அது குறித்து அலெர்ட் காட்டியுள்ளது
இதனை அடுத்து உஷாரான அவர் ஒழுங்கற்ற இதய துடிப்பினால் ஏற்படக்கூடிய ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் பற்றிய அறிவிப்பை மருத்துவரிடம் சென்று தெரிவித்துள்ளார். இதன் பின்னர் அவரை சோதித்த செயின்ட் டேவிட் சவுத் ஆஸ்டின் மருத்துவ மைய மருத்துவர்கள், ஒழுங்கற்ற இதய துடிப்பை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்தனர்.
தனது உயிரை தக்க சமயத்தில் காப்பாற்ற உதவிய ஆப்பிள் வாட்சை விலைமதிப்பற்றதாக கருதுவதாக டாக்டர் ரே எமர்சன் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை போல ஆப்பிள் வாட்ச் பல உயிர்களைக் காப்பாற்றிய பல சம்பவங்கள் ஏற்கனவே நிகழ்ந்துள்ளன.ஒரு அமெரிக்க மருத்துவர் சமீபத்தில் ஒரு உணவகத்தில் ஆட்ரியல் ஃபைப்ரிலேஷன் (AFib) ஐக் கண்டறிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஐ மணிக்கட்டில் பயன்படுத்தியதன் மூலம் ஒரு நபரின் உயிரைக் காப்பாற்றினார்.
இங்கிலாந்தில் உள்ள ஆப்பிள் வாட்ச் பயனர் ஒருவர் தனது குறைந்த இதயத் துடிப்பு குறித்து சமீபத்தில் சாதனத்தால் எச்சரிக்கப்பட்டார். இது ஒரு தீவிர இதய நிலையை வெளிப்படுத்தியது, இதன் விளைவாக சிக்கலை சரிசெய்ய ஒரு அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் பலரது உயிரை ஆப்பிள் வாட்ச் தக்க சமயத்தில் காப்பாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1