Paristamil Navigation Paristamil advert login

Twitterஇல் அறிமுகமாகும் புதிய அம்சம்!

 Twitterஇல் அறிமுகமாகும் புதிய அம்சம்!

23 கார்த்திகை 2019 சனி 17:30 | பார்வைகள் : 9757


ருவிட்டர் சமூக வலைத்தளத்தில் சோதனை செய்யப்பட்டு வந்த ஹைட் ரிப்ளைஸ் அம்சம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தற்போது வழங்கப்படுகிறது.
 
ருவிட்டர் தளத்தில் கருத்துக்களை (Comment) மறைக்கச் செய்யும் ஹைட் ரிப்ளைஸ் (Hyde Replies) அம்சம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.
 
முன்னதாக இந்த அம்சம் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சோதனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் இந்த அம்சம் வழங்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் ருவீட்களில் உள்ள கிரே நிற ஐகானை க்ளிக் செய்து ஹைட் ரிப்ளைஸ் அம்சத்தை இயக்க முடியும்.
 
புதிய அம்சம் கொண்டு பயனர்கள் எதிர்மறை கருத்துக்களை மற்றவர்கள் பார்க்காதபடி மறைக்கச் செய்ய முடியும். எனினும், மறைக்கப்பட்ட ரிப்ளைக்களை புதிய ஐகானை க்ளிக் செய்து ஃபாளோவர்கள் மட்டும் பார்க்க முடியும்.
 
இந்த அம்சம் ருவிட்டர் தளத்தில் ஆரோக்கியமான உரையாடல்களுக்கு வழிசெய்யும். இந்த அம்சம் வழங்கப்பட்ட சில மணி நேரத்திலேயே, Android தளத்தில் புதிய அம்சம் சிறிது நேரத்திற்கு செயலிழக்கச் செய்யப்படுவதாக ருவிட்டர் தெரிவித்தது.
 
சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ருவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவை கேலி கிண்டல்கள், போலி செய்திகள் மற்றும் எதிர்மறை தகவல்கள் பரவ அதிகளவு காரணமாக மாறி வருக்கின்றன. இதுபோன்ற பிரச்சினைகளை ருவிட்டரில் குறைக்கும் நோக்கில் புதிய அம்சம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்