WhatsApp செயலியில் கைரேகை வசதி!

13 கார்த்திகை 2019 புதன் 06:01 | பார்வைகள் : 12716
WhatsApp செயலியை டச் ஐ.டி. மற்றும் ஃபேஸ் ஐ.டி. மூலம் பாதுகாக்கும் வசதியை ஐபோன்களில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் வழங்கப்பட்டது.
ஐபோனை தொடர்ந்து ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் இதேபோன்ற அம்சம் WhatsApp பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்பட்டு வந்தது.
ஒகஸ்ட் மாதம் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்ட பாதுகாப்பு அம்சத்தை WhatsApp உலகம் முழுக்க அனைத்து பயனர்களுக்கும் சில தினங்களுக்கு முன் வழங்கியது.
அதன்படி ஆண்ட்ராய்டு ஸ்மார்டதொலைபேசி பயன்படுத்துவோர் கைரேகை மூலம் செயலியை Unlocked செய்து கொள்ள முடியும். இதன் மூலம் மற்றவர்கள் WhatsApp செயலியை ஊடுறுவ முடியாது.
WhatsApp ஆண்ட்ராய்டு செயலியில் கைரேகை லொக் அம்சத்தை செயற்படுத்தும் முறை:
முதலில் WhatsApp Settings – Account – Privacy ஒப்ஷனை Click செய்ய வேண்டும். Privacy ஒப்ஷனில் கைரேகை லொக் எனும் ஒப்ஷன் தெரியும்.
அடுத்து அம்சத்தை இயக்க கைரேகை மூலம் Unlockedக் செய்யக் கோரும் Unlock with fingerprint ஒப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அதன்பின்னர் ஸ்மார்ட்போனில் உள்ள கைரேகை சென்சார் அம்சத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
செயலியை பாதுகாக்க WhatsApp மூன்று ஒப்ஷன்களை வழங்குகிறது. இவை தானாக லொக் செய்யக் கோரும் ஒப்ஷனில் காணப்படுகிறது. இவை செயலியை உடனே, ஒரு நிமிடத்திற்கு பின் மற்றும் முப்பது நிமிடங்களுக்கு பின் லொக் செய்யும் வசதியை வழங்குகிறது.
கைரேகை லொக் ஒன் செய்யப்பட்டதும், தரவுகள் தானாகவே மறைக்கப்பட்டு விடும். இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டு இருந்தாலும் WhatsApp அழைப்புகள் மற்றும் நோட்டிஃபிகேஷன்களில் இருந்து குறுந்தகவல்களுக்கு எப்போதும் போல் பதில் அளிக்க முடியும். புதிய பாதுகாப்பு அம்சம் பயனர்கள் செயலியை திறந்து அதனை பயன்படுத்த முயலும் போது தான் இயங்கும்.
கைரேகை-லொக் ஒன் செய்யப்பட்ட நிலையில் நோட்டிஃபிகேஷன்களில் தரவுகள் தெரிய வேண்டாம் என நினைப்பவர்கள் அதனை Show content in notifications ஒப்ஷனில் மாற்றிக் கொள்ளலாம்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1