கூகுள் குரோம் பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
4 கார்த்திகை 2019 திங்கள் 15:12 | பார்வைகள் : 9075
அன்ரோயிட் சாதனங்களாக இருந்தாலும் சரி iOS சாதனங்களாக இருந்தாலும் சரி இணையப் பயன்பாட்டிற்கு அனேகமானவர்கள் கூகுள் குரோம் உலாவியையே பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு கூகுள் குரோம் உலாவியை பயன்படுத்தும் பல மில்லியன் கணக்கானவர்களுள் நீங்களும் ஒருவர் ஆயின் உடனடியாக குறித்த இணைய உலாவி அப்பிளிக்கேஷனை அப்டேட் செய்யுங்கள்.
காரணம் ஹேக்கர்கள் குறித்த உலாவியின் ஊடாக புகுந்து பயனர்களின் தரவுகளை திருடும் ஆபத்து காணப்பட்டது.
எனினும் இணைய ஜாம்பவான் ஆன கூகுள் குறித்த குறைபாட்டினை நிவர்த்தி செய்து புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது.
குரோம் 78 எனும் புதிய பதிப்பானது மொபைல் சாதனங்களுக்காக மாத்திரமன்றி விண்டோஸ் மற்றும் லினக்ஸ் போன்ற இயங்குதளங்கள் பயன்படுத்தப்படும் டெக்ஸ்டாப், லேப்டொப் கணினிகளுக்காகவும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.