Paristamil Navigation Paristamil advert login

Firefox உலாவியில் அறிமுகமாகும் VPN வசதி!

Firefox உலாவியில் அறிமுகமாகும் VPN வசதி!

24 ஐப்பசி 2019 வியாழன் 16:10 | பார்வைகள் : 9208


அதிகளவான இணையப் பாவனையாளர்களினால் பயன்படுத்தப்பட்டுவரும் இணைய உலாவிகளில் Firefox உலாவியும் ஒன்றாகும்.
 
இவ் உலாவியின் தற்போது VPN வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக Mozilla  நிறுவனம் அறிவித்துள்ளது.
 
இலவசமாக பயன்படுத்தக்கூடிய இவ் வசதியானது தற்போது அமெரிக்க பயனர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் இது கட்டணம் செலுத்த வேண்டிய வசதியாக மாற்றம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் டெக்ஸ்டாப், லேப்டொப் கணினிகளில் மாத்திரமே இவ் வசதியினை தற்போது பயன்படுத்த முடியும். அதேநேரம் பொது இடங்களில் உள்ள WiFi  இணைப்புக்களை பயனர்கள் பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு இந்த VPN வசதி பயனுள்ளதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்