Paristamil Navigation Paristamil advert login

TikTok செயலியில் அறிமுகமாகும் புதிய திட்டம்!

TikTok செயலியில் அறிமுகமாகும் புதிய திட்டம்!

20 ஐப்பசி 2019 ஞாயிறு 14:02 | பார்வைகள் : 8860


TikTok  செயலி சார்பில் கல்வி சார்ந்த புதிய திட்டம் Edutok என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
டிகாட்க் சார்பில் Edutok எனும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் பயனர்கள் செயலியில் இருந்தபடி தங்களுக்கு தெரியாத தகவல்களை கற்றுக் கொள்ள முடியும்.
 
புதிய திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான தரவுகள் உருவாக்கப்பட்டு அவை #Edutok எனும் ஹாஷ்டேக் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 4800 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
 
மேலும் இவை 180 கோடிக்கும் அதிக முறை பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.
 
Edutok திட்டத்தின் கீழ் TikTok  நிறுவனம் ஜோஷ் டாக்ஸ் மற்றும் தி ஃ நட்ஸ் பவுன்டேஷன் போன்ற நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறது. இதன் மூலம் TikTok பயனர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் உருவாக்கப்படும் உயர் ரக கல்வி சார்ந்த தகவல்களை முதல்முறை TikTok  பயனர்களுக்கு கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
இத்துடன் TikTok  நிறுவனம் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான டாப்பர், மேட் ஈசி மற்றும் கிரேடு அப் போன்றவற்றுடன் இணைந்து பாடங்கள் தொடர்பான தரவுகளை செயலியில் வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் செயலியிலேயே பயனர்கள் கல்வி சார்ந்த பல்வேறு தகவல்களை வெவ்வேறு பிரிவுகள் மற்றும் மொழிகளில் பெற முடியும்.
 
பயனர்கள் புதிய #Edutok அனுபவத்தை TikTok செயலியில் பெற முடியும். TikTok செயலி ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்