வெளியானது வேகமான இணைய சேவையை பயன்படுத்தும் நாடுகளின் தரவரிசை பட்டியல்!
12 ஐப்பசி 2019 சனி 04:03 | பார்வைகள் : 9431
வேகமான இணைய சேவையை பயன்படுத்துவதில் பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 13 ஆசிய நாடுகள், இந்தியாவை விட முன்னணியில் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
“ஸ்பீடு டெஸ்ட் குளோபல் இண்டெக்ஸ்” எனும் தலைப்பில் ஊக்லா நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் உலக அளவில் இணைய வேகம் பதிவிறக்கத்திற்கு விநாடிக்கு 28.02 மெகாபைட்டுகளாக அதிகரித்துள்ளது. அதே போல் பதிவேற்றத்திற்கு விநாடிக்கு 10.87 மெகாபைட்டுகளாக அதிகரித்துள்ளது. இந்த தர வரிசையில் தென்கொரியா, ஆஸ்திரேலியா, கத்தார் ஆகிய நாடுகள் அதிவேக இணைய சேவையுடன் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன.
இந்தியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் விநாடிக்கு 9.15 மெகாபைட்டுகளாக இருந்த பதிவிறக்கத்திற்கான இணைய வேகம், நடப்பாண்டு ஆகஸ்டில் விநாடிக்கு 10.65 மெகாபைட்டுகளாக அதிகரித்துள்ளது. அதே போல் இந்தியாவில் பதிவேற்றத்திற்கான இணைய வேகம் விநாடிக்கு 4.23 மெகாபைட்டுளாக உள்ளது. ஆனால் இந்தியாவின் இணைய வேகமானது, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 13 ஆசிய நாடுகளைக் காட்டிலும் குறைவு ஆகும்.