கூகுள் தரும் புதிய வசதி!
6 ஐப்பசி 2019 ஞாயிறு 14:14 | பார்வைகள் : 9529
இவ் வருட ஆரம்பத்தில் கூகுள் குரோமிற்கான புதிய நீட்சி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
இந்நீட்சியின் உதவியுடன் சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொற்கள முகாமைத்துவம் செய்யக்கூடியவாறு இருந்தது.
அதாவது கடவுச் சொற்களை நீக்குதல், சேமித்து வைத்தல் போன்றவற்றினை மேற்கொள்ள முடியும்.
இவ்வாறிருக்கையில் கூகுள் தற்போது மற்றுமொரு புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
இது இணைய உலாவியில் எமக்கு தெரியாமல் சேமிக்கப்பட்டிருக்கும் கடவுச் சொற்ளை ஸ்கான் செய்து காண்பிக்கும்.
அதேநேரம் கடவுச் சொற்களை முகாமைத்துவம் செய்யவும் முடியும்.
இவ் வசதியினை பயன்படுத்துவதற்கு https://myaccount.google.com எனும் முகவரிக்கு இணைய உலாவியில் செல்ல வேண்டும்.
பின்னர் Login செய்தல் வேண்டும். ஏற்கனவே Login செய்யப்பட்டிருந்தால் அவசியம் இல்லை.
அதனை தொடர்ந்து Security பகுதிக்கு சென்று Signing in to other sites என்பதை தெரிவு செய்து பின்னர் Password Manager என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது இணையத்தளங்களும் அவற்றிற்கான கடவுச்சொற்களும் காண்பிக்கப்படும்.
அடுத்ததாக Get Started என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
தொடர்ந்து Check Password இணைப்பினை கிளிக் செய்யும்போது அது பிறிதொரு பக்கத்திற்கு எடுத்துச்செல்லும்.
அங்கு Check Password எனும் பொத்தான் காண்பிக்கப்படும்.
அதில் கிளிக் செய்யவும். இப்போது மீண்டும் கடவுச் சொல் கேட்கப்படும்.
கடவுச்சொல்லினை கொடுத்தால் கூகுள் ஏனைய கடவுச்சொற்களை பகுப்பாய்வு செய்து பெறுபேற்றினை மூன்று வகைகளாகப் பிரித்து காண்பிக்கும்.
இதில் ஒரே மாதிரியாக கடவுச் சொற்களையும் காண்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று மாற்றிமைக்கப்படவேண்டிய கடவுச் சொற்களையும் காண்பிக்கும்.