டுவிட்டரில் புதிய வசதி! பயனாளிகள் மகிழ்ச்சி

1 பங்குனி 2018 வியாழன் 12:14 | பார்வைகள் : 14109
பேஸ்புக் உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமாக இருந்தாலும் டுவிட்டருக்கு இருக்கும் மதிப்பே தனிதான். சாதாரண நபர் முதல் அமெரிக்க ஜனாதிபதி வரை தனது கைப்படையே டுவீட்டை தட்டிவிடுவதால்
இதற்கென்று ஒரு தனி மவுசு உள்ளது. ஃபேஸ்புக்கை பல பிரபலங்கள் ஆள் வைத்து பதிவுகள் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டுவிட்டர் அவ்வப்போது தனது பயனாளிகளை மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தில் புதுப்புது வசதிகளை செய்து தருகிறது. அந்த வகையில் தற்போது மேலும் ஒரு புதிய வசதியை இன்று முதல் டுவிட்டர் தனது பயனாளிகளுக்கு அளித்துள்ளது.
இதன்படி இனிமேல் நமக்கு பிடித்த டுவீட்டுக்களை நமது ஃபாலோயர்களுக்கு ஷேர் செய்யலாம். இந்த வசதி ஃபேஸ்புக் உள்பட ஒருசில சமூக வலைத்தளங்களில் உள்ளது. இப்போது இந்த வசதி டுவிட்டருக்கும் வந்துவிட்டது.
மேலும் தற்போது டுவிட்டரில் கமென்ட், ரீடிவீட், லைக் மற்றும் மெசேஜ் என்னும் நான்கு ஐகான்கள் உள்ளது. இதில் மெசேஜ் ஐகானை தூக்கிவிட்டு அதற்கு பதிலாக ஷேர் ஐக்கானை டுவிட்டர் இணைத்துள்ளது.
இந்த ஐகானை சொடக்குவதன் மூலம், அந்த டுவீட் உங்களை யார் யாரெல்லாம் ஃபாலோ செய்கின்றார்களோ அவர்களுக்கு போய்ச்சேரும். மேலும் சேவ் செய்த டுவீட்டுகளை புக்மார்க் என்ற பக்கத்தில் நாம் விரும்பும்போது பார்த்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் நாம் புக்மார்க் செய்த டுவீட்டுகளை நம்மைத்தவிர வேறு யாருமே பார்க்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1