Facebook Messengerஇல் அறிமுகமாகிய புதிய வசதி!
23 மாசி 2018 வெள்ளி 12:54 | பார்வைகள் : 9166
பேஸ்புக் மெசன்ஜர் செயலியில் வழங்கப்பட்டிருக்கும் புதிய அப்டேட் வீடியோ அல்லது வாய்ஸ் கால் செய்யும் போது நண்பர்களை உடன் இணைத்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது.
மெசன்ஜர் செயலியில் க்ரூப் வீடியோ கால் மேற்கொள்ள அனைத்து அழைப்புகளையும் துண்டித்து விட்டு பின் மீண்டும் இன்பாக்ஸ் மூலம் புதிய அழைப்பினை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ஃபேஸ்புக் வழங்கி இருக்கும் புதிய அம்சம் வீடியோ கால் அல்லது வாய்ஸ் கால் செய்யும் போது இணைப்பை துண்டிக்காமல், நண்பர்களை இணைத்து க்ரூப் கால் செய்ய முடியும்.
வீடியோ அல்லது வாய்ஸ் கால் அழைப்பில் இருக்கும் போதே திரையை கிளிக் செய்து, "add person" ஐகானை தேர்வு செய்து நீங்கள் பேச வேண்டிய நபரை இணைத்துக் கொள்ளலாம். க்ரூப் கால் அம்சங்களில் இன்னமும் ஃபில்ட்டர்கள் மற்றும் எஃபெக்ட்கள் வழங்கப்படுகின்றன.
சாட் நிறைவுறும் போது தானாக உருவாக்கப்பட்ட க்ரூப் சாட் தொடர முடியும். ஃபேஸ்புக் வழங்கி இருக்கும் புதிய அம்சம் நிஜ வாழ்க்கையில் மற்றவர்களுடன் உரையாடும் போதே மெசன்ஜரில் உரையாட முடியும். ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.