Nokia smartphone தொடர்பான முழு விவரம்!
4 மாசி 2018 ஞாயிறு 15:14 | பார்வைகள் : 8871
நோக்கியா நிறுவனத்தின் புதிய என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் அமெரிக்க வலைத்தளத்தில் இருந்து கசிந்திருக்கிறது.
ஹெச்.எம்.டி. குளபோல் நிறுவனம் இம்மாத இறுதியில் சில நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியா இந்த ஆண்டு இன்னிங்ஸ்-ஐ நோக்கியா 6 (2018) மூலம் சீனாவில் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், நோக்கியா 8 சிரோக்கோ, நோக்கியா 9, நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 10 போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் மற்றும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுடன் என்ட்ரி-லெவல் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனினை வெளியிடலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஹெச்.எம்.டி. குளோபல் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் நோக்கியா 1 என அழைக்கப்படலாம் என அமெரிக்காவின் எஃப்.சி.சி. (FCC) வலைத்தளத்தின் மூலம் வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது.
ஸ்மார்ட்போன்களுக்கு சான்றளிக்கும் வலைத்தளமாக எஃப்.சி.சி. இருக்கும், நிலையில் நோக்கியா ஸ்மார்ட்போன் TA-1056 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த வலைத்தளத்தில் ஸ்மார்ட்போனின் சில சிறப்பம்சங்களும் வெளியாகி உள்ளது. நோக்கியா 2 ஸ்மார்ட்போன் RA-1056 என்ற மாடல் நம்பர் கொண்டிருந்த நிலையில் புதிய ஸ்மார்ட்போன் சிறியதாக இருக்கும் என கூறப்படுகிறது.
நோக்கியா 2 ஸ்மார்ட்போன் 143.5 மில்லிமீட்டர் உரமும், 71.3 மில்லிமீட்டர் அகலமாக இருந்த நிலையில், புதிய ஸ்மார்ட்போன் 133 மில்லிமீட்டர் உயரமும், 68 மில்லிமீட்டர் அகலமாக இருக்கிறது. அளவில் நோக்கியா 2-ஐ விட சதிறியதாகாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா 1 என அழைக்கப்படலாம் என்றும் இது ஆண்ட்ராய்டு கோ இயங்குதளம் கொண்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போன் 140 மில்லிமீட்டர் கொண்டிருக்கும் வகையில், வழக்கமான 16:9 ரக ஸ்கிரீன் மற்றும் 4.5 இன்ச் அல்லது அதற்கும் அதிகமாக வழங்கப்படலாம். மேலும் புதிய ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், 4 எல்.டி.இ. கழற்றக்கூடிய பேட்டரி, 3.5 எம்.எம். ஆட்யோ ஜாக் உள்ளிட்டவை கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போனின் இயங்குதளம் குறித்து எவ்வித தகவலும் இல்லை என்றாலும், நோக்கியா 3310 4ஜி போன்று புதிய ஸ்மார்ட்போனில் யுன் ஓ.எஸ். (Yun OS) அல்லது சீரிஸ் 30/ஃபீச்சர் ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு கோ வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியா 1 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 4.5 அல்லது இதற்கும் பெரிய டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 212 சிப்செட்
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை நீட்டிக்கும் வசதி
- யுன் ஓ.எஸ். சார்ந்த ஆண்ட்ராய்டு ஓரியோ
- 2200 எம்.ஏ.ஹெச். பேட்டரி
புதி்ய நோக்கியா 1 ஸ்மார்ட்போன் ஆண்டராய்டு கோ எடிஷனாக வெளியாகும் பட்சத்தில் புதிய ஸ்மார்ட்போனில் கூகுள் அறிமுகம் செய்து வழங்கி வரும் கூகுள் கோ, கூகுள் மேப்ஸ் கோ, கூகுள் அசிஸ்டண்ட் கோ போன்ற லைட் வெர்ஷன் கூகுள் செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படலாம்.
முன்னதாக வெளியான தகவல்களில் நோக்கியா 1 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் முதற்பாதியில் வெளியிடப்படலாம் என்றும் இதன் விற்பனை மார்ச் 2018-இல் ரஷ்யாவில் துவங்கலாம் என கூறப்பட்டது. இதன் விலை RUB 5990 (இந்திய மதிப்பில் ரூ.6.550) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.